2024 மே 03, வெள்ளிக்கிழமை

அம்புலன்ஸ் சேவைகள் 24 மணி நேரமும் உஷார்

Simrith   / 2024 ஏப்ரல் 14 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகைக் காலத்தில் வினைத்திறன் மற்றும் தொடர்ச்சியான சுகாதார சேவைகளை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் பாலித மஹீபால தெரிவித்துள்ளார்.

பொதுவாக பண்டிகைக் காலங்களில் விபத்துகள், உணவு விஷம் மற்றும் தொற்றாத நோய்கள் அதிகரித்து வருகிறது.

விபத்துக்கள், உணவு விஷமான சம்பவங்கள் மற்றும் தொற்றாத நோய்கள் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு துரித சேவைகளை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் மஹீபால தெரிவித்தார்.

அவசர காலங்களில் சேவைகளை வழங்க அம்புலன்ஸ் சேவைகள் இருபத்திநான்கு மணி நேரமும் தயார் நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .