2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அரிசி விலையால் அழும் அமைச்சர்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 03 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ப. பிறின்சியா டிக்சி

“அரிசி விலைக் குறைப்பின் பலன், இன்னும் நுகர்வோரைச் சென்றடையவில்லை. அரிசியின் விலையை உடனடியாகக் குறைக்குமாறு வியாபாரிகளிடம் ​கேட்டுக்கொள்கிறேன்” என, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 

நிதியமைச்சில், நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,  

“அரிசி விலைக் குறைப்பின் பலன், பொதுமக்களுக்கு மெதுவாக​வே செல்கின்றது. எனவே, களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள, மறைத்து வைக்கப்பட்டுள்ள அரிசியைச் சந்தையில் விநியோகிக்குமாறு, வியாபாரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.  

இது ஜனாதிபதி, பிரதமரின் கோரிக்கைக்கு அமைய, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை. எமது சிறந்த பயணத்தின் ஓர் அங்கமாக, வௌ்ளிக்கிழமை முதல், அரிசியின் விலை, 10 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது எனினும், அது நுகர்வோருக்கு இன்னும் கிடைக்கவில்லை. 90 ரூபாய்க்கு விற்பனை செய்த அரிசியை, 65 ரூபாய்க்கு விற்பனை செய்யும் வாய்ப்பு உள்ள போதும், அதனை ஏன் செய்யவில்லை என, வியாபாரிகளிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்” என்றார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X