2026 மே 02, சனிக்கிழமை

அரச நிறுவனங்களில் வேலைகள் முடங்கின

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை அரசநிர்வாக சேவை சங்கம், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ள பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக, அரச நிறுவனங்கள் பலவற்றில் வேலைகள் முடங்கியுள்ளன.

மேலதிக வேதனக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்து வரும் குறித்த பணிப்பகிஷ்கரிப்பால் குடிவரவு, குடியகல்வு,ஆள் அடையாள அட்டை பதிவு, மோட்டார் போக்குவரத்து அத்துடன் கடவுச்சீட்டு விநியோகம் என்பவற்றில் காலதாமதமும் ஏற்பட்டுள்ளது.

மேலும் தமது கோரிக்கைகளுக்கு ஒருவார காலத்துக்குள் தீர்வு வழங்காதுவிடின் மாபெரும் போராட்ட​மொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை அரச நிர்வாக  சேவை சங்கத்தின் செயலாளர் ரோஹண டி சில்வா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .