2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அரசமைப்பு சபையின் உறுப்பினராக அமைச்சர் தலதாவின் பெயரும் பரிந்துரை

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசமைப்பு சபையின் உறுப்பினர்களாக அமைச்சர் தலதா ​அத்துகோரள, நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஸ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அரசமைப்பு சபைக்கு பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர்களின் பரிந்துரைகளுக்கமைய, நியமிக்கப்பட வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் குறித்த இருவரினதும் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவரின் யோசனையின் கீழ் 3 சிவில் உறுப்பினர்களை அரசமைப்பு சபைக்கு நியமிக்க வேண்டும்.  இந்த சிவில் உறுப்பினர்களாக இராஜதந்திர அதிகாரிகளான ஜயந்த தனபால, அஹமட் ஜாவெட் யூசுப் மற்றும் கொழும்பு பல்கலைகழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் செல்வகுமாரனின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளது.

அதேப்போல் அரசமைப்பு சபைக்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாற்று கட்சி ஒன்றின் உறுப்பினராக நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்கவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .