2026 மே 02, சனிக்கிழமை

அரசியலமைப்பில் ’புதியதை நகர்த்தவும்’

Editorial   / 2020 டிசெம்பர் 16 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகல இன மக்களையும் திருப்திப்படுத்தும் வகையிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல, நல்லாட்சி அரசாங்கம் இறுதி செய்துள்ள அரசியலமைப்பு வரைபை, தற்போதைய அரசாங்கம் பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
 
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர், முன்னாள் தலைவர்களான சிறிமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜயவர்தன ஆகியோரால் இரு அரசியலமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன அவ்விரு சந்தர்ப்பங்களிலும் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் கட்சிகளின் ஆதரவு கிடைக்கவில்லை என்றும் கூறினார்.
 
தமிழ் கட்சிகளின் பங்களிப்பு இல்லாமல் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை கொண்டு, மேற்படி அரசியலமைப்புகள் நிறைவேற்றப்பட்டன எனத் தெரிவித்த அவர், நாட்டின் எதிர்காலம் சிறக்க வேண்டுமெனில் தற்போதைய அரசாங்கம் சகல இன மக்களின் நிலைப்பாட்டையும் கருத்திற்கொண்டு அரசியல் அமைப்பொன்றை உருவாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 
 
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதோடுஇ அந்த அரசியலமைப்பை உருவாக்குவதற்கான குழுவில் சகல கட்சிகளின் அங்கத்துவமும் ஏற்கப்பட்டது என்றும் 78 சுற்றுப் பேச்சுகள் நடத்தப்பட்டன எனவும் தெரிவித்தார். 
 
அந்த நேரத்தில், நாட்டின் தெற்கு பகுதிகளிலுள்ள முதலமைச்சர்களும் இந்த கூட்டங்களில் பங்கெடுத்திருந்தனர் எனத் தெரிவித்த அவர், அவர்களே அதிகப்படியான அதிகார பகிர்வைக் கோரியிருந்தனர் எனவும் தெரிவித்தார்.
 
ஆகையால், சகல இனத்தவரும் திருப்திப்படும் வகையிலான அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளுமாயின், அதனை நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக  அமையும் என்றார்.
 
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவில் 90 சதவீதமான விடயங்கள் தொடர்பாக இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தாவும் அந்த அரசியலமைப்பில் இணக்கப்பாடு எட்டப்படாத சில விடயங்கள் பற்றிய பேச்சுக்களை அரசாங்கம் முன்னெடுத்து தீர்வுகளை பெற்றுக்கொண்டால்இ விரைவில் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்றார்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .