2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

’அரசியல் கட்சிகளின் பாவங்களை பொதுமக்கள் மீது சுமத்த வேண்டாம்’

Editorial   / 2018 நவம்பர் 25 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் கட்சிகளின் பாவங்கள் பொதுமக்களின் மீது சுமத்தப்படாமல் நிலையான நாட்டுக்காக உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துமாறு எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்​கொண்டப்  போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

நாட்டின் அரசியல் சிக்கல் நிலைக் காரணமாக, பொருளாதாரம், அரசியல் மற்றும் ஒற்றுமை சீரழிந்துள்ளதால் உடனடியாகப் பொதுத் தேர்தலை நடத்தி இந்தப் பி​ரச்சினைகளுக்கு தீர்வைப் ​பெற வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலொன்று அவசியம் என்ற குரல்கள் தற்போது நாட்டில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளதாகவும் நாட்டை நிலையான நாடாக முன்னேற்றவே பொதுத் தேர்தல் அவசியமாகியுள்ளதாகவும் எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .