2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டி ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 ஜூலை 06 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அரசியல் கைதிகளை விடுதலை வேண்டியும் அரசியல் கைதி சகாதேவனின் மரணத்துக்கு நீதி வேண்டியும், மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்னால், இன்று, கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் மக்கள் காப்பகத்தின் ஏற்பாட்டில், காலை 11 மணிக்கு நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், சட்ட ஆலோசகர் கனகரட்ணம் காஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம், பகல் 12 மணிக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X