Editorial / 2025 ஜூலை 11 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
ஏறாவூர் களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியம்மன் கோவிலில் இடம் பெற்ற வருடாந்த சடங்கின் போது தெய்வம் ஆடிய ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்ததுடன் ஒருவர் மீது தெய்வம் ஆடிய ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தியதை அடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (10) இரவு 9.30 மணிக்கு இடம் பெற்றதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி சிங்காரதோப்பு கிராமத்தில் உள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் வருடாந்த திருவிழாவின் இறுதி நாள் சடங்கு சம்பவ தினம் வியாழக்கிழமை (10) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது
இதன் போது பக்தர்கள் ஆலயத்தினுள் தெய்வம்ஆடிக் கொண்டிருந்தபோது 37 வயதுடைய நிமலன் என்பவர் திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து அவர் அங்கு உயிரிழந்தார். இதையடுத்து அங்கு தெய்வம் ஆடிக் கொண்டிருந்த ஒருவர் மீது இன்னொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார். தாக்குதலை மேற்கொண்டவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
13 Mar 2026
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Mar 2026
13 Mar 2026