Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 29 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
கொழும்பு குப்பைகளை, புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புத்தளம் வனாத்தவில்லு பிரதேச சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
வன்னாத்தவில்லு பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு, தலைவர் சமந்த முனசிங்க தலைமையில் சபா மண்டபத்தில் நேற்று (28) இடம்பெற்றது.
பதினெட்டு உறுப்பினர்களைக் கொண்ட வனாத்தவில்லு பிரதேச சபையில், நேற்றைய சபை அமர்வில் அனைத்து உறுப்பினர்களும் சமூகமளித்திருந்தனர்.
இதன்போது, கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.எம்.அனஸ்தீன் சமர்பித்த பிரேரணை, விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, உரையாற்றிய பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் குப்பைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இடமளிக்க முடியாது என்றார். அத்துடன், ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதனையடுத்து, குப்பைத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை தொடர்பில், திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் 6 பேர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் நால்வர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் தலா ஒவ்வொருமாக 14 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இந்த வாக்களிப்பில், நால்வர் நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, குறித்த பிரேரணை அதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
40 minute ago
49 minute ago
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
49 minute ago
2 hours ago
9 hours ago