2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அரை நிர்வாணமாக படங்களை எடுத்த மூவருக்கு பிணை

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிதுரங்கல்லின் மேலிருந்து அரைநிர்வாணமாக புகைப்படங்களை எடுத்து, அதனை இணையத்தளங்களில் தரவேற்றம் செய்திருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும், தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (10) ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போதே, நீதவான் கோசல பண்டார இலங்கசிங்க, மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

மூவரையும் கடுமையாக எச்சரித்த நீதவான், தலா 1,500 ரூபாய் படி தண்டம் விதித்து, அவர்களை விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

தங்கள் மீதான் குற்றத்தை ஒத்துக்கொண்ட கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மூவரே, மேற்கண்டவாறு பிணையில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .