2025 ஜூலை 05, சனிக்கிழமை

’அர்ஜுன மகேந்திரன் கைது செய்யப்படுவார்’

Editorial   / 2019 பெப்ரவரி 14 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்களை, ஐக்கிய தேசியக் கட்சி பாதுகாப்பு வழங்காதெனத் தெரிவித்துள்ள பிரதி அமைச்சர் நளீன் பண்டார, அர்ஜுன மஹேந்திரனைக் கைது செய்வதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

 

சர்வதேச பொருளாதார அலுவல்கள் அமைச்சில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் ​கருத்துரைத்த அவர், 

மத்திய வங்கி பிணைமுறி வி​நியோகத்தில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் மீது தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவின் இளைய மகனின் திருமண நிகழ்வில் அர்ஜுன் அ​லோசியஸ் கலந்துகொண்டிருந்ததை எவரும் கண்டுகொள்வதில்லை எனவும் தெரிவித்தார்.

பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழேயே தண்டனை வழங்கப்பட்டதெனத் தெரிவித்த அவர், 11 மாதங்களாக குற்றவாளிகள் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர் என்றும் தெரிவித்தார்.

அதனால், ஐக்கிய தேசியக் கட்சியின் மீது சேறு பூசுவதை நிறுத்துவேண்டுமெனவும், அர்ஜுன் அலோசியஸ் போன்றே அர்ஜுன மஹேந்திரனை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், உதயங்க வீரதுங்க போன்றவர்களைக் ​கைது செய்வதற்கான நீண்ட நாள்கள் சென்றது போலவே வெளிநாட்டிலிருக்கும் அர்ஜுன மஹேந்திரனை சட்டரீதியாக கைது செய்யும் முயற்சிகளுக்கு கால அவகாசம் அவசியடுமெனவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .