2025 ஒக்டோபர் 18, சனிக்கிழமை

அர்ஜுன் மகேந்திரனின் புதிய புகைப்படம் வெளியீடு

Freelancer   / 2025 ஒக்டோபர் 18 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கில் தேடப்படும் குற்றவாளியான முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் புதிய புகைப்படத்தை சிரேஷ்ட ஊடகவியலாளர் உவிந்து குருகுலசூரிய தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

உவிந்து குருகுலசூரிய, தான் சமூக ஊடகத்தில் பகிர்ந்த புகைப்படத்துடன், அர்ஜுன மகேந்திரன் சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தன்னைத் தொடர்புகொண்டார் என்று தெரிவித்துள்ளார்.

 அர்ஜுன் மகேந்திரன் தன்னுடன் பல விடயங்கள் குறித்துப் பேசினார் என்றும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு ஓர் ஆலோசனையைத் தெரிவிக்குமாறு கோரினார் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

அதற்குத் தான் மறுத்துவிட்டார் என்றும், இந்த உரையாடலில் பல கதைகள் இடம்பெற்றன என்றும், அர்ஜுன் மகேந்திரனைத் தனக்கு மூன்று தசாப்தங்களாகத் தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .