Editorial / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்தானியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை, நாடு கடத்துவது தொடர்பிலான கோரிக்கைக்கு சிங்கப்பூர் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக அண்மையில் அறிவித்தது.
உரிய ஆவணங்கள் கிடைக்கப் பெற்ற பின்னர் நாடு கடத்தல் கோரிக்கை தொடர்பில் சிங்கப்பூர், சட்டத்திற்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், குறித்த ஆவணங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட நிலையில், அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago