2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

அறபாநகரில் சோகம்: சிறுவன் மரணம்

Editorial   / 2020 டிசெம்பர் 26 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அறபாநகர் கிராமத்தில் மதில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை நாசீவந்தீவைச் சேர்ந்த சிறுவன், தனது தாய் தொழில் நிமிர்த்தம் சவூதி அரேபியாவிற்கு சென்ற நிலையில் அறபாநகர் பகுதியிலுள்ள தனது சகோதரியின் வீட்டில் வசித்து வந்த நிலையில் எதிர்வீட்டு மதில் சுவரினை பிடித்து ஏறுவதற்கு முயற்சித்த போது மதில் சிறுவன் மேல் விழுந்துள்ளது. இந்த நிலையில் குறித்த சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை நாசீவந்தீவு முருகன் ஆலய வீதியைச் சேர்ந்த கோபால் பிறேமசாந் என்ற (வயது 13) சிறுவனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவனின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X