2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

அறுவை சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2025 ஜூன் 24 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர், நிர்வாக உதவியாளர் ஒருவர் மற்றும் அவரது ஊழியரின் விளக்கமறியல் ஜூலை 8 ஆம் திகதி வரை  நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு, கொழும்பு பிரதம  நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்கவினால், செவ்வாய்க்கிழமை (24) பிறப்பிக்கப்பட்டது.

 

சந்தேக நபர்களான ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேஷி சூரசிங்க விஜேரத்ன, அதே மருத்துவமனையின் மேலாண்மை உதவியாளர் கெகுலந்தல லியனகே இந்திகா மற்றும் மருத்துவரால் நடத்தப்படும் தனியார் நிறுவனத்தின் ஊழியர் நிமல் ரஞ்சித் ஆகியோர் ஜூன் 17 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் (CIABOC) கைது செய்யப்பட்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .