2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அலரி மாளிகையை படம்பிடித்த இந்தியர் கைது

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலரி மாளிகையையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் படம்பிடித்த குற்றச்சாட்டில் 36 வயதுடைய இந்தியப் பிரஜையொருவரை, இன்று (04) காலை கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அப் பகுதிகள்  அலங்கரிக்கப்பட்டிருந்தமையினால், அவற்றை அழகாகப் புகைப்படம் எடுக்க முற்பட்டதாக, குறித்த இந்தியப் பிரஜை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறிருப்பினும், இது தொடர்பான விசாரணைகளைத் தாம் மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜை, வத்தளைப் பகுதியில் வசித்து வந்துள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X