Editorial / 2020 நவம்பர் 22 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகை தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா அச்சம் காரணமாகவே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அலரி மாளிகை இந்த வாரத்தில் முடக்கப்பட்டிருக்கும்”. “மறு அறிவித்தல் வரை பணியாளர்கள் கடமைக்குச் சமூகமளிக்கத் தேவையில்லை” என அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
பிரதமரின் அலுவலகம் முடக்கப்பட்டிருப்பது குறித்து இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
அலரிமாளிகையின் பாதுகாப்புக்காக பணியில் அமர்த்தப்பட்டுள்ள விஷேட அதிரடிப்படையினர் பலருக்கும் கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே அலரிமாளிகையைத் தனிமைப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகின்றது. இதுதொடர்பில், சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago