2025 மே 02, வெள்ளிக்கிழமை

அலி ரொசான் உள்ளிட்ட 8 பேருக்கு பிணை

Editorial   / 2019 ஓகஸ்ட் 02 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலி ரொசான் என்று அழைக்கப்படும் நிரஞ்சன் ரொஷான் உள்ளிட்ட 8 சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க விசேட மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனுமதிப்பத்திரமின்றி யானை குட்டிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு விகும் களுஆராச்சி,  தம்மிக கனேபொல மற்றும் ஆதித்ய பட்பெந்தி ஆகிய நீதிபதிகள் அடங்கிய குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது, சந்தே நபர்களை தலா 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் விடுவிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், வழக்கு விசாரணைகள் ஓகஸ்ட் 30ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .