Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊழல் ஒழிப்பு பிரிவின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமாரவின் அலைபேசியிலிருந்து அழிக்கப்பட்ட குரல் பதிவுகள் தொடர்பான அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக இரகசியப் பொலிஸார் இன்று நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பான அலைபேசி பதிவுகள் சில நாமல் குமாரவின் அலைபேசியிலிருந்து அழிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த அலைபேசியை தயாரித்த ஹொங்ஹொங்கிலுள்ள “ டேடா எக்ஸ்பர்ட்” நிறுவனத்தின் ஊடாக அழிக்கப்பட்ட பதிவுகள் மீளப்பெற்று அவை பென்டரைவ் மற்றும் 60 பக்கத்திலான அறிக்கைகளாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இன்று மாலைக்குள் குறித்த அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் இரகசியப் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
29 minute ago