Niroshini / 2018 பெப்ரவரி 07 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மஹேந்திரன் விடயத்தில் தான் பொறுப்பேற்கின்றேன் என பிரதமர் கூறியிருந்தார். அப்படியாயின், சிங்கப்பூருக்கு சென்று அர்ஜூன மஹேந்திரனை அழைத்து வருமாறு பிரதமர் ரணில் விக்கிமரங்கவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிக்கவேண்டுமென கோரிக்கை விடுத்த, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, இரண்டாவது ஆணைக்குழுவை நிறுவுமாறும் கேட்டுக்கொண்டார்.
இரண்டாவது ஜனாதிபதி ஆணைக்குழு, பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸுடன் தொலைபேசி உரையாடல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டோர் தொடர்பில் ஆராயவேண்டும். அத்துடன், மத்திய வங்கியின் புதிய ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பிலும் அடுத்த விவாதத்தின் போது சபையில் தெரிவிக்க வேண்டும் எனவும் கோரிநின்றார்.
“நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு 49 நாட்களுக்குள் மத்திய வங்கி மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியின் மூலமாக கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அர்ஜூன மஹேந்திரனை, தன்னுடைய எதிர்ப்பையும் மீறி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதான் நியமித்தார் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
“அதேபோன்று, அர்ஜூன மஹேந்திரன் எனது நம்பிக்கைகுரியவர். அவர் தொடர்பில் நான் பொறுப்பேற்கின்றேன் என பிரதமர் கூறினார். அப்படியாயின், தற்போது அர்ஜூன மஹேந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.
மேலும், “மத்திய வங்கி பிணைமுறி மோசடி ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் மறைக்கப்பட்ட விவகாரங்கள் அடங்கிய இறுவட்டு தற்போது எமக்குத் தரப்பட்டுள்ளது. இதனை ஆராய்வதற்கு எமக்கு நேரம் போதாது. ஆகவே, குறித்த இறுவட்டு தொடர்பில் ஆராய்வதற்கு மேலும் விவாதம் வேண்டும்” எனவும் குறிப்பிட்டார்.
4 hours ago
8 hours ago
26 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
26 Jan 2026