2025 மே 05, திங்கட்கிழமை

அழைப்பாணையை அமுல்படுத்துபவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2023 நவம்பர் 21 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளரின் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் மற்றுமொரு ஊழியரை நாளை (22) அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (21) உத்தரவிட்டுள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று (21) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சந்தேக நபர் கோட்டை நீதவான் நீதிமன்றில் பணிபுரியும் அழைப்பாணையை அமுல்படுத்துபவர் எனவும், அவர் நாளை (22) அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி,  விதிக்கப்பட்ட விமானப் பயணத் தடை நீக்கப்பட்டதாக போலி ஆவணம் தயாரித்த குற்றஞ்சாட்டில்  குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளரைக் கைது செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X