2026 மே 14, வியாழக்கிழமை

dd

அவசரத்துக்கு மாத்திரம் 119ஐ சுழற்றுங்கள்

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 22 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசர தேவைகளுக்காக மாத்திரம் பொலிஸ் அவசர தொலை​பேசி இலக்கமான 119க்கு அழைக்குமாறு, பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறித்த தொலைபேசி இலக்கத்துக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளில் 93 சதவீதமானவை தேவையற்ற விடயங்களுக்காக முன்னெடுக்கப்படும் அழைப்புகள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன் காரணைமாக, உண்மையான மற்றும் அவசர காரணங்களுக்காக அழைப்பவர்களின் தொலைபேசி அழைப்புகள் தவறவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த வருடம் 119 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு நாளொன்றுக்கு 3,300 அழைப்புகள் கிடைக்கப்பெறுவதாகத் தெரிவித்துள்ள அவர், கடந்த வருடம் இந்த தொலைபேசி இலக்கத்துக்கு  12,32,272 அழைப்புகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .