2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஆங்கில ஆசிரியைக்கும் பரீட்சார்த்திக்கும் பிணை

Editorial   / 2018 டிசெம்பர் 07 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலைபேசியை பயன்படுத்தி ஆங்கிலப் பரீட்சை எழுதினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்ட பரீட்சார்த்தியும், குறுஞ்செய்தியின் ஊடாக அவருக்கு உதவினார் என்று குற்றஞ்சாட்டப்பட்ட, ஆங்கில ஆசிரியையும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவ்விருவரும், பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவ்விருவரையும் த​லா 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில், நீதவானும் மற்றும் மாவட்ட நீதிபதியுமான துமிந்த பீ முதுன்கொட கட்டளையிட்டார்.

அந்த ஆசிரியை, பரீட்சை கடமைகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியை என்று விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றது என பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .