R.Maheshwary / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
சில தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வட்சப் ஊடாக போலி தகவல் பரிமாறிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கந்தானை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் நேற்று (19) குறித்த நபர், கந்தானை பிரதேசத்திலுள்ள பலருக்கு ஆங்கிலத்தில் அத்தகவலை பகிர்ந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனமொன்றில் கணக்காய்வாளராக கடமையாற்றும் 31 வயதுடைய வெலிகம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago