Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Freelancer / 2025 மார்ச் 08 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்பிலிப்பிட்டிய கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று (7) ஆசிரியர் ஒருவர் பெண் ஆசிரியை ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதுரி கங்கானி இன்று (8) பாராளுமன்ற அமர்வில் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த தாக்குதல் பாடசாலை பெண் அதிபரின் முன்னிலையில் நடந்ததாகவும், தாக்கப்பட்ட ஆசிரியை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
அதன் பின்னர் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்த சம்பவம் இன்று காலை தமக்கு தெரியவந்ததாக குறிப்பிட்டார்
இருப்பினும், இந்த தாக்குதல் தொடர்பாக நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
அத்துடன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சுக்கு அறிவிக்கப்படும் என்றும், அதன் முன்னேற்றம் குறித்து இன்றைய (8) நாளுக்குள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் பிரதமர் மேலும் கூறினார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
20 May 2025