Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 31 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் லட்சுமி மேனன், குடிபோதையில் தனது நண்பர்களுடன் இணைந்து ஒரு ஐடி ஊழியரை கடத்தி, தாக்கி, அவமானப்படுத்தியதாக அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த சம்பவம் அவரது பொது இமேஜையும், எதிர்கால திரைப்பட வாழ்க்கையையும் பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
கொச்சியில் உள்ள பிரபல மதுபான விடுதியில் 2025 ஆகஸ்ட் 24 அன்று நடந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. லட்சுமி மேனன் மற்றும் அவரது மூன்று நண்பர்கள், 27 வயது ஐடி ஊழியரான அலியர் ஷா சாலிமுடன் மோதலில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், அலியர் மற்றும் அவரது நண்பர்கள் மதுபான விடுதியை விட்டு வெளியேறியபோது, லட்சுமி மற்றும் அவரது குழுவினர் அவர்களை காரில் பின்தொடர்ந்து, எர்ணாகுலம் வடக்கு ரயில்வே ஓவர்பிரிஜ் அருகே அவர்களது வாகனத்தை வழிமறித்தனர்.
பொலிஸ் அறிக்கையின்படி, லட்சுமி மேனனின் நண்பர்கள் ஐடி ஊழியரை காரில் கடத்திச் சென்று, அவரை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அவரது ஆடைகளை கழற்றி, மர்ம உறுப்புகளை தாக்கியுள்ளனர். மேலும், அவரது ஆடையில் சிந்தி காய்ந்து போயிருந்த மயோனைஸ்-ஐ “இது காய்ந்த விந்துவா?” என்று கேட்டு மனதளவில் அவமானப்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், கொச்சையான, ஆபாசமான வார்த்தைகளால் தாக்கியதாகவும், இதை எல்லாம் தங்களுடைய கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளனர்.
இந்த வீடியோ காவல் துறை வசம் சிக்கியுள்ளது. அவர்கள் பதிவு செய்த வீடியோவே தற்போது அவர்களுக்கு எதிரான சாட்சியாக மாறியுள்ளது.
இவர்களில் மிதுன் மற்றும் அனீஷ் மீது முன்னர் குடிபோதை மற்றும் வன்முறை தொடர்பான வழக்குகள் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தகவல், லட்சுமியின் நண்பர்கள் தேர்வு குறித்து பொதுமக்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
எர்ணாகுலம் வடக்கு காவல் நிலையத்தில், லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் மீது கடத்தல், உடல் தாக்குதல், அவமானப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லட்சுமியின் நண்பர்களான மிதுன், அனீஷ், மற்றும் சோனமோல் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். லட்சுமி தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், அவரைத் தேடி விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சுமி மேனன், தனது முன்ஜாமீன் மனுவில், இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை என்று வாதிட்டுள்ளார். “மதுபான விடுதியில், ஐடி ஊழியர் மற்றும் அவரது நண்பர்கள் என்னையும் எனது நண்பர்களையும் பாலியல் ரீதியாக அவமானப்படுத்தினர்.
நாங்கள் மறுத்தபோது, அவர்கள் ஆபாசமாகப் பேசி, வன்முறையில் ஈடுபட்டனர்,” என்று அவர் கூறியுள்ளார். இதற்கு ஆதரவாக, அவரது நண்பர் சோனமோல் தனி புகார் ஒன்றையும் பதிவு செய்துள்ளார். கேரள உயர் நீதிமன்றம், லட்சுமியின் மனுவை ஏற்று, செப்டம்பர் 17 வரை அவரை கைது செய்ய தடை விதித்துள்ளது.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “திருமணமாகாத ஒரு நடிகை இத்தகைய நண்பர்களுடன் மதுபான விடுதிக்கு செல்வது ஏன்?” என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இது லட்சுமியின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பொது இமேஜை பாதிக்கலாம் என்று திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன.
லட்சுமி மேனன், ‘சுந்தரபாண்டியன்’, ‘கும்கி’, ‘ஜிகர்தண்டா’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து, தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். ஆனால், இந்த சர்ச்சை, அவரது எதிர்கால திரைப்பட வாய்ப்புகளை பாதிக்கலாம் என்று விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் முழு உண்மையை அறிய, பொலிஸ் விசாரணையின் முடிவுகளை காத்திருக்க வேண்டும். தற்போது, இந்த சம்பவம் திரையுலகில் மட்டுமல்லாமல், பொதுவெளியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லட்சுமி மேனனின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணையின் முடிவுகள், இந்த சர்ச்சையின் திசையை தீர்மானிக்கும்
36 minute ago
45 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
45 minute ago
59 minute ago
1 hours ago