2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஆட்சியைக் கைப்பற்றுவதாக நாமல் உறுதி

Editorial   / 2019 ஜனவரி 12 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கம், தேர்தலை காலம் தாழ்த்தாது நடத்தினால், பெரும்பான்மை பலத்துடன், ஆட்சி அமைப்பது உறுதி என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், நாட்டைப் பிளவுபடுத்தும் செயற்பாடுகளை, அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் மக்களுக்காக சேவையாற்றுவதிலும் பார்க்க, பதவியாசைக் கொண்ட அரசாங்கமே, தற்போது ஆட்சியில் உள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டு மக்கள், எதிர்கட்சி மீதே நம்பிக்கைக் கொண்டுள்ளது என்றும் எனவே, நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு, ஒரு​போதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .