2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஆணைக்குழுவின் பின்புற கதவில் அமைச்சர்கள் எஸ்கேப்

Gavitha   / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

யொஹான் பெரேரா   

“இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பின்புறக்கதவு மூடப்பட வேண்டும் என்று, நானும் ஜே.வி.பி.யின் எம்.பி விஜித்த ஹேரத்தும் கோரிக்கை விடுத்துள்ளோம். ஏனெனில், பல அமைச்சர்கள், ஆணைக்குழுவின் பின்புறக்கதவால், கறுப்புக் கண்ணாடிகளைக் கொண்ட வாகனங்களை பயன்படுத்தி ஓடிவிடுகின்றனர்” என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். 

கொழும்பில், நேற்றுத் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

“அரசாங்கத்திலுள்ள பிரதியமைச்சர் ஒருவர் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்தவுடன், அவர் கூடிய விரைவில் கைது செய்யப்படுவார்” என்றும் அவர் தெரிவித்தார்.  

“அரசாங்கத்துக்கு கீழ் உள்ள அலுவலகமொன்றில் இடம்பெற்ற ஊழல் காரணமாக, அரசாங்கத்திலுள்ள பிரதியமைச்சர் ஒருவர் கைது செய்யப்படுகின்றமை வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெறவுள்ளது” எனவும் ரஞ்சன் கூறினார்.   

“இந்நடவடிக்கை, அரசாங்கத்திலுள்ள எந்தவொரு அமைச்சரும் ஊழலில் ஈடுபட்டால், அவர், சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது என்பதை
நி‌‌​‌‌‌‌‌ரூபிக்கின்றது” என்றும் அவர் தெரிவித்தார்.   

மேலும், 15 அமைச்சர்கள், இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.  மேலும், தானும் சில முறை இந்த ஆணைக்குழுவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .