2025 டிசெம்பர் 31, புதன்கிழமை

’ஆண்களுக்கு நிகராக பெண்களும் போதைக்கு அடிமை’

Freelancer   / 2025 ஜனவரி 28 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாணத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயிர்கொல்லி போதைப் பாவனைக்கு இலக்காகி இருக்கின்றார்கள் என்று  வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

நல்லூர் இளங்கலைஞர் மன்றம் புனரமைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றும்போதே ஆளுநர் இவ்வாறு  கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்துக்கான புனர்வாழ்வு நிலையம் அமைப்பது தொடர்பில் என்னுடன் கலந்துரையாடினார்கள். அதற்குப் பொறுப்பானவர்கள் தங்களுக்கு இரண்டு இடங்கள் தேவை எனக் கேட்டார்கள்.

ஏன் இரண்டு இடங்கள் தேவை என அவர்களிடம் நான் கேட்டேன். ஆண்களுக்கும், பெண்களுக்கும் தேவை எனச் சொன்னார்கள். பெண்களுக்கும் புனர்வாழ்வு நிலையம் தேவையா எனக் கேட்டேன்.

இப்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயிர்கொல்லி போதைப் பாவனைக்கு இலக்காகி இருக்கின்றார்கள் எனச் சொன்னார்கள். மிக மனவேதனையான விடயம். எமது இளைய சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றது? இது ஆபத்தான நிலைமை. இதனைத் தடுப்பதற்கு இளையோர்களின் ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடும் தளங்கள் தேவை. அதற்கான வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X