Editorial / 2025 டிசெம்பர் 29 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில் அதை கட்டுப்படுத்த அரசு செயல்பட்டு வரும் நிலையில் அங்கு புது பிரச்சினை முளைத்துள்ளது.
அதாவது, வங்கதேசத்தில் தற்போது ஆணுறைகள் (காண்டம்)க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாம். ஏற்கனவே மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் தற்போது கருத்தடை சாதனமான காண்டமுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது வங்கதேச ஆட்சியாளர்களை திணறடிக்க வைத்துள்ளது.
வங்கதேசம் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இருந்தே கொதி நிலையில் உள்ளது. ஷேக் ஹசீனா அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.
நிலமை கையை மீறி சென்றதால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதையடுத்து அங்கு முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், மீண்டும் அங்கு வன்முறை வெடித்துள்ளது.
மாணவர் தலைவர் ஷாரிப் ஒஸ்மான் ஹைதி கொல்லப்பட்டதால் வங்கதேசம் முழுவதும் வன்முறை வெடித்து இருக்கிறது. இதனால், அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது. நிலமை கையை மீறி சென்றுவிடாமல் இருக்க ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடி வரும் சூழலில், வங்கதேசத்தில் புது பிரச்சனை முளைத்து இருக்கிறது. அதாவது, வங்கதேசத்தில் தற்போது ஆணுறைகள் (காண்டம்)க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாம். மக்கள் தொகை ஏற்கனவே அதிகமாக இருப்பதால் தற்போது கருத்தடை சாதனமான காண்டமுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு வங்கதேச ஆட்சியாளர்களை திணறடிக்க வைத்துள்ளது.
தேவைக்கு ஏற்ப போதிய காண்டம்களை சப்ளை செய்ய முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் நிலமை இன்னும் மோசமாக கூடுமாம். இந்த தட்டுப்பாடு திடீரென ஏற்பட்டது இல்லை. கடந்த சில ஆண்டுகளாக ஆணுறைகளுக்கான தட்டுப்பாடு படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது. நிதிப்பற்றாக்குறை மற்றும் பணியாளர்கள் தட்டுப்பாட்டால் காண்டம்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 38 நாட்களில் முற்றிலும் தீர்ந்துவிடும் என்று வங்கதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 15 கோடி மக்கள் தொகை கொண்ட வங்கதேசத்தில், குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த ஐந்து கட்ட கருத்தடை திட்டங்களை வங்கதேச குடும்ப கட்டுப்பாடு இயக்குநகரம் மேற்கொண்டு வருகிறது. அதாவது, ஆணுறைகள், மாத்திரைகள், ஊசி மருந்துகள், காப்பர் டி உள்ளிட்டவை வழங்கி வருகின்றன.
கடந்த 6 ஆண்டுகளாகவே, வங்கதேசத்தில் ஆணுறை விநியோகம் 57 சதவீதம் வரை வீழ்ச்சியை சந்தித்து இருந்தது. பிற கருத்தடை சாதனங்களும் 2019 முதல் விநியோக பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. கள பணியாளர்கள் பற்றாக்குறையும் விநியோக பாதிப்புக்கு முக்கியமானதாக இருப்பதாகவும், சட்ட பிரச்சினைகளால் சில பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வங்கதேசத்தில் கருவுறுதல் விகிதம் அதிகரித்துள்ள சூழலில், ஆணுறை தட்டுப்பாடும் ஏற்பட்டு அதிகாரிகளை கவலை அடைய வைத்துள்ளது. தற்போது கருத்தடை சாதனங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால், கருவுறுதல் விகிதம் மேலும் உயரும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். டாக்கா பல்கலைக்கழகத்தின் மக்கள் தொகை அறிவியல் துறை பேராசிரியர் அமினுல் இஸ்லாம் இது தொடர்பாக கூறியதாவது:-
சமீபத்திய ஆண்டுகளில் பல தம்பதிகள் இடையே, குடும்பக் கட்டுப்பாடு செய்வதில் ஆர்வம் குறைந்துவிட்டது. சிலர் 2 குழந்தைகளுக்கும் மேல் பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். கடந்த மாதம் வெளியான அறிக்கையின் படி, மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) கடந்த ஆண்டு 2.3 ஆக இருந்ததிலிருந்து தற்போது 2.4 ஆக உயர்ந்துள்ளது.
27 minute ago
37 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
37 minute ago
1 hours ago