2024 மே 03, வெள்ளிக்கிழமை

’’ஆணுக்கு ஆண்: பெண்ணுக்கு பெண்’’ : பரபரப்பு தீர்ப்பு

Editorial   / 2024 ஏப்ரல் 07 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மசாஜ் (ஸ்பா) நிலையங்களில், பாலியல் ரீதியான மசாஜ் செய்வதை தடுக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் புதுடெல்லி உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இந்தியாவில், சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் ஸ்பா மற்றும் மசாஜ் நிலையங்கள் இயங்கி வருகின்றன.. இந்த நிலையங்களில்  பாலியல் தொழில்  ரகசியமாக நடப்பதாகவும் அவ்வப்போது பொலிஸாருக்கு இரகசிய புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

இதையடுத்து, பொலிஸாரும் சம்பந்தப்பட்ட ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில், மஃப்ட்டியில் சென்று கண்காணித்து, நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.. ஸ்பா, மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் செய்பவர்களையும் அதிரடியாக கைது செய்கிறார்கள்.

ஒருவேளை, அந்த மசாஜ் நிறுவனங்களில் லைசன்ஸ் புதுப்பிக்கப்படாமல் அதையும் கண்டறிந்து அபராதம் விதிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஒரே இடத்தில் வாங்கிய சர்ட்டிபிகேட்டுகளை வைத்து கொண்டு, நிறைய இடங்களில் மசாஜ் சென்டர்களை நடத்தி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுகிறது..

 இப்படி காவல்துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும், ஸ்பா என்ற பெயரில் குற்றச்செயல்கள் அதிகரித்தபடியே உள்ளன.. தமிழகத்தில் உள்ள ஸ்பா மையங்களிலும், சில முறைகேடுகள் அவ்வப்போது நடந்து வருகிறது. இதனை தடுக்க அரசு சில கட்டுப்பாடுகளை அறிவித்தும், முழுமையாக போக்க முடியவில்லை.

இப்படிப்பட்ட சூழலில், ஸ்பா மையங்களில் ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண்ணே மசாஜ் செய்ய உத்தரவிட வேண்டும் என்று பொதுநல புதுடெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

அந்த மனுவில், "2021 ஓகஸ்ட் 18,  அன்று புதுடெல்லி அரசினால் வெளியிடப்பட்ட ஸ்பாக்கள்/மசாஜ் மையங்களை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை மீறி பல்வேறு ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் மையங்களில் ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் மசாஜ் செய்கின்றனர். ஆகவே ஸ்பா மையங்களில் ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண்ணே மசாஜ் செய்ய உத்தரவிட வேண்டவேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை, தற்காலிக தலைமை நீதிபதி மன்மோகன் மற்றும் நீதிபதி மன்மீத் பி.எஸ் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, "புதுடெல்லி அரசாங்கம் கடந்த 2021 ஓகஸ்ட் 18ம் திகதி புதுடெல்லியில் செயல்பட்டு வரும் ஸ்பாகள் மற்றும் மசாஜ் மையங்களை இயக்க வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதன் பெயரில் செயல்பட்டு வரும் ஸ்பாக்களை தடை செய்ய இயலாது.

மனுதாரர் தன்னுடைய முறையிட்டில், வழிகாட்டுதல்களை மீறி கதவு தாழிடப்பட்ட அறைக்குள் மசாஜ் செய்யப்படும் போது விபச்சாரம் நடைபெறுவதாக சொல்கிறார். விபசாரம் போன்ற சட்டவிரோத செயல்கள் கண்டிக்கத்தக்கது. அதற்கு காவல்துறையினரின் சார்பில் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக யாரேனும் அவ்வாறான செயலில் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுடெல்லி அரசினால் வெளியிடப்பட்ட ஸ்பாக்கள்/மசாஜ் மையங்களை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகவே அந்த வழக்கின் முடிவு தெரியும் வரை இந்த வழக்கை விசாரிக்க முடியாது எனக்கூறி உந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

  தள்ளுபடி செய்யப்பட்ட அந்த மனுவில், ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் மையங்களின் ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளை டெல்லி மகளிர் ஆணையத்துடன் தொடர்ச்சியாக பகிர்ந்து கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு மனுதாரர் நீதிமன்றத்தை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசின் சட்டத்தின் கீழ் மசாஜ் மையம், அழகு நிலையங்கள், ஸ்பா ஆகியவை வணிக உரிமம் பெற வேண்டிய தொழில்கள் பட்டியலில் 6வது இடத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .