Editorial / 2019 செப்டெம்பர் 11 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளை (12) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையாக மாட்டார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நாளை 12ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவில் ஆஜராக வேண்டும் என பிரதமருக்கு கடந்த 09 ஆம் திகதி அழைப்பு விடுக்கப்பட்டது.
தொலைநகல் மூலமாக இந்த உத்தரவு பிரதமர் அலுவலகம் மற்றும் அலரி மாளிகைக்கு அனுப்பப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், எதிர்வரும் 16ஆம் திகதி முன்னிலையாகுமாறு குறித்த ஆணைக்குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்று (11) அறிவித்துள்ளது.
விவசாய அமைச்சின் கட்டடமொன்றைக் குத்தகைக்குப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் சாட்சியமளிப்பதற்காக பிரதமருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
7 hours ago
9 hours ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago
02 May 2026