2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஆதிமுறை விவசாயத்துக்கு முஸ்தீபு

Gavitha   / 2016 மார்ச் 08 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

'விவசாயத்தில் இரசாயனப் பதார்த்தங்களைப் பயன்படுத்தாது, ஆதி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட விவசாய முறைமையை மீண்டும் தோற்றுவிக்கும் முயற்சிகள், முன்னெடுக்கப்படும். இம்முயற்சி சற்றுக் கடினமானதாகின்ற போதிலும், அதுவே சிறந்த வழி' என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

'விஷம் இல்லாத நாட்டை நோக்கிய பயணம்' எனும் தொனிப்பொருளிலான தேசிய கண்காட்சியொன்று, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், ஜனாதிபதி தலைமையில் நேற்று திங்கட்கிழமை (07) ஆரம்பிக்கப்பட்டது.

எதிர்வரும் மூன்று வருடங்களில், விவசாயத்தில் இரசாயனப் பதார்த்தங்களைப் பயன்படுத்துவதிலிருந்து விலகிச்செல்லல் எனும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே, இந்தத் தேசிய கண்காட்சியும் விழிப்புணர்வு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'விஷம் இல்லாத நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த வேலைத்திட்டத்தை வெற்றிபெறச் செய்ய, அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .