Niroshini / 2021 மே 28 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை (போர்ட் சிட்டி) நிறைவேற்றிக்கொள்வதற்காக, பாராளுமன்றம் கூட்டப்பட்டமையால், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எம்.பிக்கள் சிலருக்கும், பணியாளர்கள் பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதென ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
“பாராளுமன்றத்தைக் கடந்த 18ஆம் திகதி முதல் கூட்டியதாலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு கொரோனா தொற்றியுள்ளது” எனத் தெரிவித்த எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடாவும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்றத்துக்கு வெளியிலிருந்து சஜித்துக்கு கொரோனா தொற்றியிருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
“எதிர்க்கட்சித் தலைவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று எங்கிருந்து ஏற்பட்டதென்பது தொடர்பான மருத்துவப் பகுப்பாய்வுகள் எதுவும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை” என படைக்களச் சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
சபாநாயகர்,பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் காரியாலயத்தில் ஒரு மாதத்துக்கு முன்பே கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் காணப்பட்டனர். எனவே, இவர்களிடமிருந்து சஜித்துக்குக் கொரோனா வைரஸ் தொற்றியிருக்க வாய்ப்பில்லை எனவும் படைக்களச் சேவிதர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலைகளை செய்ததால், அவர்களிடமிருந்து சஜித்துக்கு கொரோனா தொற்றியிருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் தெரிவித்துள்ளார்.
படைக்கள சேவிதரின் இக்கருத்தை நிராகரித்துள்ள எதிர்க்கட்சியின் பிரதம கொறடா, பாராளுமன்றத்துக்கு வெளியிலிருந்து சஜித்துக்கு தொற்று ஏற்பட்டதாக கூறப்படுவதில் உண்மையில்லை எனவும், சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் காரியாலயத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர் என்றார்.
மேலும், துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக பாராளுமன்றத்தைக் கடந்த 18ஆம் திகதி முதல் கூட்டியிருக்காமல் இருந்திருந்தால், சஜித்துக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்காது எனவும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் நிலைமைகளுக்கு மத்தியில், பாராளுமன்றத்தை இந்த நாள்களில் கூட்ட வேண்டாமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்றச் செயலாளரை சந்தித்து கோரிக்கை ஒன்றை விடுத்திருந்ததார். எனினும், அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago