2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஆபாச காணொளிகளை பார்த்த உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Editorial   / 2018 நவம்பர் 21 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாண சபை அமர்வின் போது, ஆபாச காணொளிகளைப் பார்வையிட்ட உறுப்பினர்களுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமென, மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப் பிரிய தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாண சபையின் புதிய கட்டடத்தில் பொருத்தப்பட்டுள்ள டெப்பினைப் பயன்படுத்தியே இவ்வாறு ஆபாச ​காணொளிகள் பார்வையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதிக நிதி செலவில் அமைக்கப்பட்டுள்ள மாகாண சபையின் புதிய கட்டடத்தில் நேற்று முன்தினம் (19)  இடம்பெற்ற முதலாவது அமர்வின் போது, மேல் மாகாண சபையின் முதலமைச்சர் இசுறு தேவப்பிரியவால் வரவு செலவுதிட்டத்தை சமர்ப்பித்த சந்தர்ப்பத்தில் உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு ஆபாச காணொளிகளை பார்வையிட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .