2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஆவா குழுவை செயற்படுத்தும் மேர்வின்?

Princiya Dixci   / 2016 நவம்பர் 09 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைக்காலமாக யாழில் செயற்படும் ஆவா குழு தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றன. 

நிதி நிறுவனங்களின் தேவைகளுக்கு அமைய யாழில் ஆவா குழு செயற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், தற்போது அது அரசியல் வடிவம் பெற்றுள்ளது.

தென்னிலங்கை அரசியலை தீர்மானிக்கும் வகையில் வடபகுதியில் பதற்ற நிலையை ஏற்படுத்தும் குழுவாக ஆவா செயற்படுவதாக தற்போது பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் கோட்டாபய செயற்படுவதாகவும், சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் அந்த குழுவை நிர்வகிப்பதாகவும் தெரிய வருகிறது. 

இந்நிலையில் ஆவா குழுவின் தலைவருக்கும் முன்னாள் அமைச்சரான மேர்வின் சில்வாவுக்கும் தொடர்புள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.  மேர்வின் சில்வா, யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளையில், ஆவா குழுவின் தலைவர் என்று கூறப்பட்டவர் பொன்னாடை போர்த்தி வரவேற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. குறித்த ஊடகம் இந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. 

செந்தூரன் என்ற பெயரில் ஆவா குழு செயற்படுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும் குமரு சுவாமிநாதன் தலைமையில் இந்த குழு செயற்படுவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .