2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஆவா குழு உறுப்பினர்களுக்கு விளக்கமறியல்

Editorial   / 2018 டிசெம்பர் 02 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம்- சுன்னாகம் பிர​தேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட ஆவா குழு உறுப்பினர்கள் மூவரையும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்- மல்லாகம் நீதிவான் ஏ. அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த 3 சந்தேகநபர்களும் 5 வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் பலவற்றுடன் கைதுசெய்யப்பட்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20, 21 வயதுடையவர்களென்றும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை,கடந்த நவம்பர் மாதம் 28ஆம் திகதி ஆவா குழுவின் தலைவராக செயற்பட்ட அசோகன் எனப்படும் அசோக்குமார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .