2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

இ.போ.ச பஸ் மீது தாக்குதல்: பொலிஸ் கான்ஸ்டபிள் காயம்

Editorial   / 2018 டிசெம்பர் 02 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமத்திலிருந்து அநுராதபுரம் ஊடாக யாழ்ப்பாணம் வரை பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்றின் மீது இன்று  அதிகாலை (2) சாவகச்சேரி- நுணாவில் பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளபட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தின் போது, சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலிருந்து கடமை முடிந்து வீடு நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்து, சாவகச்​சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லையென்றும், இது தொடர்பான ​மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .