2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இடமாற்றம் கோரும் ஆசிரியர்கள்

Editorial   / 2020 ஜனவரி 24 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

மத்திய மாகாணத்தில் கடமையாற்றும் ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்து இடமாற்றங்களைக் கோருவதாகவும் குறித்த கோரிக்கைகளுள் பெரும்பான்மையான கோரிக்கைகள் மிகவும் நியாயமற்ற  கோரிக்கைகள் என மத்திய மாகாண ஆளுநர் லலித்.யூ.கமகே தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (22) நடைபெற்ற பொதுமக்கள் தினத்தின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஒரு சில ஆசியர்கள் 3 வருடங்கள்  கஸ்ட பிரதேசங்களில் கடமையாற்றியதன் பின்னர் வெவ்வேறு காரணங்களைக் கூறிக் கொண்டு இடமாற்றங்கள் கோரி வரும் நிலையில், 7 வருடங்கள் கஸ்டப் பிரதேசங்களில் தொடர்ச்சியாக கடமையாற்றி வருகின்றமை தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே மத்திய மாகாணாத்தில் இடமாற்றம் தொடர்பான முறையொன்றை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .