Editorial / 2018 டிசெம்பர் 06 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிரான இடைக்காலத் தடை 8ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் அதற்கு நாளை வரை இடைக்காலத் தடை விதித்திருந்தது.
குறித்த மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று மூன்றாவது நாளாகவும் 7 நீதியரசர்கள் அடங்கிய குழாமால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவும் நாளை மறுதினம் வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளைய தினமும் குறித்த மனுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago