2025 ஜூலை 16, புதன்கிழமை

இடைத்தரகர்களின்றி இன்றும் மரக்கறி, பழம் கொள்வனவு

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்தியாவசியச் சேவைகளுக்கான ஜனாதிபதி செயலணியின் தலையீட்டில், மரக்கறிகள் மற்றும் பழங்களைக் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டம்,  இன்று (15) ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அநுராதபுரம், பதுளை, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை பொன்ற பிரதேசங்களை மய்யப்படுத்தி, நாளைய தினம் அவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரைப் புத்தாண்டுக் காலத்தையொட்டி ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் முதலாம் கட்டம், இம்மாதம் 11, 12ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்டது.

அந்த வகையில், இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்ட விவசாயிகளிடமிருந்து மரக்கறிகளையும் அநுராதபுரம் மற்றும் மஹாவிலச்சிய விவசாயிகளிடமிருந்து பூசணிக்காய்களையும் கொள்வனவு செய்ய, மேற்படி செயலணி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்டிப, நேற்றுக் காலை நொச்சியாகம மற்றும் மஹாவிலச்சி ஆகிய பகுதிகளுக்குச் சென்றுள்ள செயலணியினர், பூசணிக்காய்களைக் கொள்வனவு செய்துள்ளனர்.

அந்த வகையில், மஹாவிலச்சிய பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்டிருந்த 265,000 கிலோகிராம் பூசணிக்காய் விளைச்சலில் 149,000 கிலோகிராம் விளைச்சலை, கிலொவுக்கு 40 ரூபாய்ப்படி செயலணி கொள்வனவு செய்துள்ளது.

தவிர, பதுளை, பண்டாரவளை, வெலிமடை, கெப்பட்டிபொல ஆகிய பிரதேசங்களிலிருந்தம் மரக்கறிகளைக் கொள்வனவு செய்ய, செயலணி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .