2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இணைந்த எதிரணியினரின் பாரிய பேரணி

Gavitha   / 2016 மார்ச் 03 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் இணைந்த எதிரணியினர், எதிர்வரும் 17ஆம் திகதி, பாரிய பேரணியொன்றைக் கொழும்பில்  நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்தப் பேரணி இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
போர் வீரர்களை வேட்டையாடுகின்றமை, விவசாயிகளுக்கான மானியங்களைக் குறைத்தமை, இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் ஒப்பந்தம், மக்களது உரிமைகளை அடக்குதல், உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைத்தமை போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்தப் பேரணி நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்த பேரணியானது, தொடர்ச்சியாக மாவட்ட அடிப்படையிலும் இடம்பெறவுள்ளதாகவும் இதன்போது, இணைந்த எதிரணியில் உள்ள பல தலைவர்கள் உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .