2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இணையத்தளங்களை பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச மற்றும் தனியார் இணையத்தளங்களை பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக, இலங்கை கணினி அவசர நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.

அரச மற்றும் தனியார் இணையத்தளங்களை ஊடுறுவுபவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளதாகவும் எனவே, இவர்களிடமிருந்து இணையத்தளங்களை காப்பதற்காகவே, இவ்விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அப்பிரிவு மேலும் கூறியுள்ளது.

கடந்த வருடம் மட்டும் 12 இணையத்தளங்கள் இவ்வாறு ஊடுறுவப்பட்டுள்ளதாக, மேற்படி பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சத்துரங்க தெரிவித்தார்.

அரச மற்றும் தனியார் வலைத்தளங்களை நிர்வகிக்க தேவையான அறிவு, பிரத்தியேகமாக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X