2026 மே 11, திங்கட்கிழமை

‘இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதால் மின் தடை ஏற்படாது’

Editorial   / 2019 ஜூலை 09 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்குவதற்கு, எரிபொருள் கூட்டுதாபனம் இணங்கியுள்ளதால், மின் தடை ஏற்படாதென, மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்  இலங்கை மின்சார சபையின் அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருளை வழங்கும் நடவடிக்கை, எரிபொருள் கூட்டுதாபனத்தால் இடைநிறுத்தப்பட்டது. இதனால்  நாட்டின் பல பிரதேசங்களில் மின்தடை ஏற்பட்டிருந்தது.

மின் தடை தொடர்பில், மின்சக்தி அமைச்சு, நிதியமைச்சுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஊடாக, எரிபொருள் கூட்டுதாபனத்துக்கு இலங்கை மின்சார சபை செலுத்தவுள்ள நிதியை விரைவாக செலுத்தவும் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட வேண்டிய எரிபொருளை வழங்குவதற்கும் இணக்கபாடு எட்டப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .