2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இது ரவியின் வாரம்

George   / 2016 நவம்பர் 10 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கலாத்மா ஜயவர்தன

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினரால், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில், நேற்றுப் புதன்கிழமை (09) முறைப்பாடு செய்யப்பட்டது.

கடந்த 18 மாதக் காலப்பகுதியில், நிதியமைச்சரினால் மேற்கொள்ளப்பட்ட 12 ஊழல், மோசடிகள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 3 சம்பவங்கள் குறித்தே, இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறினார்.

ஒன்றிணைந்த எதிரணியினரால், பொரளை என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில், நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய மஹிந்தானந்த எம்.பி, “அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வகிக்கும் மேலும் ஒன்பது பேருக்கு எதிரான முறைப்பாடுகளைச் செய்யவுள்ளோம். வாரத்தில் ஒருவர் என்ற ரீதியில், இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்படும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .