Editorial / 2020 டிசெம்பர் 17 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
உயர் நீதிமன்றக் கட்டடத்தொகுதியில் ஏற்பட்ட தீப் பரவில் விடயத்தை சாதாரண நிகழ்வாகப் பார்க்காது, இது தொடர்பில் விரிவான அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, பாதுகாப்பு தரப்பினரிடம் சிங்கள ராவய அமைப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்க எம்.பிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையிலேயே உயர் நீதிமன்றக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக, சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மஹல்கந்த சுதத்த தேரர் தெரிவித்தார்.
கல்குடா, பாசிக்குடாவிலுள்ள தனியார் உல்லா விடுதியொன்றில், நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துரைக்கையில், 'நீதிமன்றத்தின், இதயம் எனக் கருதப்படும் உயர் நீதிமன்றத்தில் ஒரு முக்கிய இடத்தில் தீ பற்றியது மனவேதனைக்குரிய விடயமாகும். இந்த தீ விபத்து தொடர்பாக அறிந்துகொள்ள வேண்டிய கடப்பாடு நாட்டு மக்களுக்கு உள்ளது. கடந்த மாதங்களில் நாட்டில் தொடராக ஏற்பட்ட சம்பவங்களைப் பார்க்கும் போது, இந்த தீ சம்பவத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது' என்றார்.
'நாட்டில் முக்கியமான வழக்குகள் பலவற்றின் தீர்ப்புக்கள் இந்த நீதிமன்றத்தின் ஊடாக வழங்கப்படவிருக்கும் நிலையிலேயே இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், இதுதொடர்பில் பரந்தளவில் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.
'மஹர சிறைச்சாலையில் பாரிய கலவரம் ஏற்பட்டது. அந்தக் கலவரத்தைப் பயன்படுத்தி மதில்களை உடைத்துக் கொண்டு, கைதிகள் தப்பியோடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நடவடிக்கையைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது. இதற்கு அப்பால் சூத்திரதாரிகள் யார், இதற்கு திட்டமிட்டு உறுதுணையாக இருந்தார்களாக? என்பது தொடர்பில் எமக்குள் கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன. அதுதொடர்பிலும் நீதிமன்றக் கட்டட தீ தொடர்பிலும் சந்தேகம் உள்ளதா? என பார்க்க வேண்டியுள்ளது' என்றார்.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago