2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இந்திய - இலங்கை மீனவர் பேச்சு இன்று இடம்பெறும்

Gavitha   / 2017 ஜனவரி 02 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினை குறித்த கலந்துரையாடலுக்கு, இந்தியாவின் விவசாய மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் ராதா ​மொஹான் சிங், இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகிய இருவரும், கொழும்பில் இன்று சந்திக்கவுள்ளனர்.  

இந்தக் கலந்துரையாடலில், இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி 11 பேரும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 15 பேரும், கலந்துகொள்ளவுள்ளனர்.  

இலங்கை, இந்திய மீன்பிடித்துறை அமைச்சுகளின் செயலாளர்கள், மீனவர்கள் விவகாரம் குறித்து கலந்துரையாடுவதற்கு, கடந்த சனிக்கிழமையன்று புதுடெல்லியில் கூடினர். இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமையவே, இந்தக் கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.   குறித்த விவகாரம் குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, இரண்டு நாடுகளின் மீன்பிடித்துறை அமைச்சர்களும், கடந்த ஒக்டோபர் மாதம் புதுடெல்லியில் கூடிய கூட்டமே, முதலாவது கூட்டமாகும். 

இந்தக் கலந்துரையாடலின் போது, இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதிலிருந்து பாதுகாத்தல், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களுடைய படகுகளையும் விடுவித்தல், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடல் வளங்களை அபிவிருத்தி செய்தல் போன்றவை குறித்து தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .