2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இந்திய துறைமுகத்தில் இலங்கைக் கப்பல்கள்

George   / 2016 ஒக்டோபர் 24 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயிற்சி மற்றும் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு ஐந்து நாள் பயணமாக இந்தியாவுக்கு சென்றுள்ள இலங்கை கடற்படை கப்பல்களான “சயுர“ மற்றும் “சுரநிமல” ஆகியவை இன்று திங்கட்கிழமை, இந்தியாவில் கொச்சி துறைமுகத்துக்கு சென்றடைந்தன.

இந்தியா கடற்படையினரால் இந்த இரண்டு கப்பல்களும் கடற்படை பாரம்பரிய மரபுகளுடன் வரவேற்கப்பட்டன.

 

இந்தக் கப்பல்களின் கெப்டன்களான பிரசன்ன அமரதாச மற்றும் பூஜித விதான ஆகியோர், இந்திய தெற்கு கடற்படை கட்டளையிடும் அதிகாரி ரியர் அட்மிரல் ரவீந்திர ஜெயந்தி நட்கார்னியை   கொச்சி தலைமையகத்தில் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது பரஸ்பர நற்புறவு மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் கருத்து பரிமாறப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .