2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவின் பாதீட்டிலிருந்து இலங்கைக்கு ரூ. 1.25 பில்லியன் ஒதுக்கீடு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 03 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில், 1.25 பில்லியன் இந்திய ரூபாய் (2,796,114,550 இலங்கை ரூபாய்), இலங்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு வழங்கவுள்ள உதவித் தொகையே, இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென, இந்திய ஊடகமொன்று, செய்தி வெளியிட்டுள்ளது.  

2017ஆம் ஆண்டு, இந்தியாவின் வெளிவிவகார அமைச்சுக்காக 147.98 மில்லியன் இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடுகளுக்கு வழங்கவேண்டிய உதவித்தொகைக்காக, 64.79 பில்லியன் இந்திய ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

இதன் பிரகாரம், பூட்டானுக்கு, 37.14 பில்லியன் இந்திய ரூபாய், ஆப்பிரிக்க நாடுகளுக்கு 3.30 பில்லியன் இந்திய ரூபாய், பங்களாதேஷுக்கு 1.25 பில்லியன் இந்திய ரூபாய் மற்றும் இலங்கைக்கு 1.25 பில்லியன் இந்திய ரூபாய் என்ற அடிப்படையில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X