2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கைக்கு வருகிறார்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், வர்த்தகத் தூதுக் குழுவினருடன், இந்த வார இறுதிப் பகுதியில் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் முதலீட்டு விடயங்கள் தொடர்பாக, இந்திய வெளிவிவகாரச் செயலாளர் தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வருடத்தில், இவர், இலங்கைக்கு விஜயம் செய்யும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்திய வெளிவிவகாரச் செயலாளர், இதற்கு முன்னர், கடந்த ஜனவரி மாதம் விஜயம் மேற்கொண்டு, இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையே செய்துகொள்ளப்படவுள்ள 'எட்கா' உடன்படிக்கை தொடர்பான முதற்கட்டப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .